கொரோனா தொற்று – உலகில் இதுவரை 2.8 கோடியை தாண்டியது!

Saturday, September 12th, 2020

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 919,512 உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.8 கோடியை எட்டியுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பு 28,647,471 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 919,512 ஆக உள்ளது. கொரோனா பாதித்த 28,647,471 பேரில் 20,570,938 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 6,636,247 பேரும், இந்தியாவில் 4,657,379 பேரும், பிரேசிலில் 4,283,978 பேரும், ரஷ்யாவில் 1,051,874 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,570,938 ஆக உள்ளது. தற்போது 7,157,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60,884 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related posts:


அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் கைச...
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை கூட்டுறவுத் துறையால் வெற்றிகர...
யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை திறக்குமாறு வடக்கு -கிழக்கு ஆயர் மன்றம் சுவி...