ட்ரம்ப் மீது ரஷ்யக் கொடிகளை வீசி அரச துரோகி என கூச்சலிட்டவர் கைது !

Friday, October 27th, 2017

அமெரிக்க நாடாளுமன்றமான கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்புகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பாராத சம்பவமொன்றுக்கு முகங்கொடுத்தார்.

கூட்டம் நிறைவடைந்த பின்னர், செனட் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இருவருடன் சென்றுகொண்டிருந்தார்.இதன்போது, ஊடகவியலாளர்களுக்கான பிரிவிலிருந்த ஒருவர் ரஷ்ய நாட்டு கொடிகள் பலவற்றை அவர் மீது வீசி எறிந்தார்.அத்துடன், ட்ரம்பை அரச துரோகி என கூறி கூச்சலிட்டார்.

இதனை கருத்திற்கொள்ளாது ட்ரம்ப் அங்கிருந்து வெளியேறினார்.எவ்வாறாயினும், அந்நபரை அங்கிருந்து வெளியேற்ற பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ரஷ்யாவுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், வரி தொடர்பில் அரச துரோகியொருவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அந்நபர் இதன்போது கூறினார்.

விசாரணைகளில் அவரது பெயர் ரயன் க்லேடன் என தெரியவந்துள்ளது.ஊடகவியலாளர் என தம்மை அடையாளப்படுத்தி அவர் உள்ளே நுழைந்துள்ளார்.அவர் ”அமெரிக்கன் டேன் அக்ஷன்” எனப்படும் அமைப்பின் பிரதிநிதி என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: