பொறுப்புக்களை களைவதற்கு பாகிஸ்தான் முயற்சி – பரம்ஜித் சிங் !

Monday, May 15th, 2023

தங்கள்மீது படித்த கறையை மீட்டுக்க திட்டமிடப்பட்ட வகையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு முகவர்களால் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தேசிய அகாலி தளத் தலைவர் பரம்ஜித் சிங் தெரிவித்தார்.

மூத்த காலிஸ்தானித் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்வார் கொல்லப்பட்டமையால் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் கறையை மீட்டெடுக்க அவர்கள் இவ்வாறு செய்வதாக கொஊறியுள்ளார்.

காலிஸ்தான் தலைவர்கள் இப்போது பாகிஸ்தானுக்கு சுமையாக மாறிவிட்டனர். சமீபத்தில் பரம்ஜித்சிங் பஞ்வார் கொல்லப்பட்டார். அதற்கு பொறுப்புக்கூறும் செயற்பாட்டில் இருந்து விடுபடவும், கறைபடிந்த பின்னணியைச் சுத்தப்படுத்தவும் பாகிஸ்தான் பாதுகாப்பு முகவர்களால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

மூத்த காலிஸ்தானி தலைவர்களை ஆதரிப்பதாலும் அடைக்கலம் கொடுப்பதாலும் பாகிஸ்தான் பெரும் சர்வதேச அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. வாதாவா சிங், சிங் ரஞ்சித், நீதா சிங் மற்றும் லக்பீர் சிங் ரோட் போன்ற காலிஸ்தானி முக்கிஸ்தர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் அடைக்கலம் கொடுத்துள்ளமயால் சர்வதேச கவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தீவிரவாதிகளை தக்கவைக்கவும், சர்வதேச விசாரணையை தவிர்க்கவும் பாகிஸ்தான் புதிய உத்தியை கையாண்டு வருவதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு முகவர்களுடன் இணைந்து இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்துவதாகக் கூறப்படும் ரிண்டா போன்ற இளம் காலிஸ்தானி தலைவர்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறமை பொருத்தமற்ற செயற்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

காலிஸ்தானி குழுக்களின் பழைய காவலர்களை அகற்றிவிட்டு, இந்திய-விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புதிய கூறுகளை உள்ளீர்ப்பதற்கு பாகிஸ்தான் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது என்றும், அதற்க பஞ்வார் கொலைதான் முதல் நடவடிக்கையாகும், என்றும் தெரிவித்தார்.

காலிஸ்தானின் மூத்த தலைவர் பரம்ஜித் சிங் பஞ்வார், பாகிஸ்தானின் லாகூரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பஞ்வார் காலிஸ்தான் கமாண்டோ படை-பஞ்ச்வார் குழுவின் தலைவராக இருந்ததோடு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 2020 இல் இந்தியாவால் பயங்கரவாதியாக அடையாளமிடப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

00

Related posts: