பெருவில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் சிக்கி 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Friday, April 7th, 2017

தென் அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தில் சிக்கி 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வடக்கு பெருவில் கடும் வௌ்ளம் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு வௌ்ளத்தில் சிக்குண்ட மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.வௌ்ளத்தில் மூழ்கியுள்ள பியூரா பிராந்தியத்தில் இருந்து நேற்று (05) மீட்கப்பட்ட தாயொருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

மரியா பின்கோ என்ற பெண்ணை நுயேவா எஸ்பெரான்ஸா நகரிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.ஹெலிகொப்டரில் சிக்லாயோ பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரியா குழந்தையை பிரசவித்துள்ளார்.வௌ்ள அனர்த்தம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

நாட்டின் வட பகுதியிலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் உட்கட்டமைப்பின் பெரும்பகுதி அழிவடைந்துள்ளதாக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆறுகள் பெருக்கெடுப்பதால் ஏற்படும் வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களை பெரு தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றது. பெருவின் 800 இற்கும் மேற்பட்ட நகரங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: