டாலருக்கு எதிராக நைரா!

Tuesday, June 21st, 2016

வெளிநாட்டு பணப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புக்களை சமாளிக்கும் விதமாக நைஜீரியா ‘நைரா’ என்ற நாணயத்தை புழக்கத்தில் விட்டுள்ளது.

இச்சூழலில், சுமார் 23 சதவீதத்துக்கு நைராவின் மதிப்பு உடனடியாக குறைக்கப்பட்டது. திங்களன்று வங்கிகளுக்கு இடையேயான வர்த்தக தொடக்கத்திற்குபின் நைராவின் மதிப்பு குறைக்கப்பட்டது. ஒரு அமெரிக்க டாலருக்கு, நைராவின் மதிப்பு 255 ஆக இருந்தது.

இதற்குமுன், ஒரு அமெரிக்க டாலருக்கு 197 ஆக நைரா நிர்ணயிக்கப்பட்டிருந்தது.எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி, நைராவின் நிலையை ஸ்திரமாக வைத்திருப்பது கடினம் என ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.கள்ள சந்தைகளில், ஒரு டாலருக்கு 350 நைரா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Related posts: