தென் சீன கடல்பிராந்திய வான்பரப்பில் அமெரிக்க குண்டு வீச்சு வாநூர்திகள்!

Saturday, July 8th, 2017

சர்ச்சைக்கு உரிய தென் சீன கடல்பிராந்திய வான்பரப்பில் இரண்டு அமெரிக்க குண்டு வீச்சு வாநூர்திகள் பறந்து சென்றுள்ளன. சீனா உரிமை கோருவது போல, இந்த பிராந்தியம் சீனாவின் கட்டுப்பாட்டினுள் உள்ள பகுதி அல்லவென அமெரிக்காவினால் இன்று விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் சீன தலைவர்கள் வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளனர்.குறிப்பாக வடகொரியாவை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு சீனா எந்தவகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வட கொரியா கடந்த செவ்வாய் கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதித்துள்ளது.இந்த வகையான ஏவுகணை அமெரிக்க வட மேற்கு பசிபிக்வரை சென்று தாக்கக்கூடிய வலுவை கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: