இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் தலைவர் இராஜினாமா!

Tuesday, November 1st, 2016
எகிப்திய அரசாங்கத்தை கோபமூட்டும் வகையில், அதிபர் அப்துல் ஃபத்தாக் அல் சிசி பற்றிய கேலியான கருத்தை கூறிய சில நாட்களுக்குப் பிறகு, இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் தலைவர், இயத் மதானி, பதவி விலகியுள்ளார்.

இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் அறிக்கையில் இயத் மதானி தனது உடல்நலம் காரணமாக பதவி விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, எகிப்த் அரசிடம் மன்னிப்பு கோரிய மதானி, மனதைப் புண்படுத்தும் நோக்கில் எதையும் செய்யவில்லை என்று கூறினார் .

எகிப்திய வெளியுறவு அமைச்சகம் அவரது அவமானப்படுத்தும் விதமாக இருந்த கேலியான கருத்தை, இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பைத் தோற்றுவித்த நாடுகளில் ஒன்றுக்கு எதிரான, தீவிரமாக அவமதிக்கும் செயல் என விவரித்தது.

அதிபர் சிசி, எகிப்தியர்கள் கடும் பொருளாதார நெருக்கடியைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் தனது குளிர்சாதனப் பெட்டியில் ஒரு தசாப்தமாக வெறும் தண்ணீர் மட்டும் தான் இருந்தது என்று கூறிய கருத்துக்களை குறித்து மதானி கேலி செய்தார்.

_92204816_1

Related posts: