போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை உடனடியாக தரையிறக்க சீன அரசு உத்தரவு!

Monday, March 11th, 2019

எதியோப்பியாவில் ஏற்பட்ட விமான விபத்தை அடுத்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எதியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்-8’ விமானம், கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பாக அதிகாரிகள் உயர்மட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், எத்தியோப்பிய விபத்தை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு கருதி ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தையும் உடனடியாக தரையிறக்கி, வர்த்தக ரீதியிலான சேவையை நிறுத்தி வைக்கும்படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் தீவிரமாக பரிசோதனை செய்து, அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் விமான சேவை ஆரம்பமாகும் என சீனாவின் சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts: