பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற 50 நாள் அவகாசம் – இந்திய ரிசர்வ் வங்கி!

Friday, November 11th, 2016

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற 50 நாள் அவகாசம் உள்ளதால், பொதுமக்கள் அவசரப்பட வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், 2000 ரூபாய் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்களையும் பிற மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களையும் நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வங்கிகளுக்கு தேவயைான அளவு கரன்ஸி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தானியங்கி பணம் வழங்கும் (ஏ.டி.எம்) இயந்திரங்களை முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர வங்கிகளுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படலாம். அவை முழுமையாக செயல்படத் துவங்கினால், வரும் 18-ம் தேதி வரை ஒவ்வொரு ஏடிஎம் கார்டுக்கும் நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கலாம். அதன்பிறகு, நாளொன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கலாம். இரண்டாயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கும் வகையில் ஏடிஎம்கள் மாற்றியமைக்கப்பட்டு, இன்று காலை முதல் பல மையங்கள் செயல்படத் தொடங்கிவிட்டதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 30-ம் தேதி வரை, செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம். 50 நாள் அவகாசம் உள்ளதால் பீதியடையத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி கூறியள்ளது.

09-rbi4-600

Related posts: