ஐரோப்பாவுக்கான எண்ணெய் விநியோகத்தை ஈரான் ஆரம்பித்தது

Monday, March 7th, 2016

ஐரோப்பிய ஒன்றியம் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்கியதன் பின்னர் ஈரானிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் ஐரோப்பாவை வந்தடைந்துள்ளது.

ஒரு மில்லியன் பரல் கச்சா எண்ணெயுடன் வந்த மோன்டி டொலிடோ’ எனப் பெயரிடப்பட்ட ராங்கர் கப்பல், ஸ்பெயினின் தெற்கு பகுதியான சான் றோக் என்ற இடத்தில் எண்ணெய் சுத்திகரிப்பிற்காக எண்ணெயை இறக்கியுள்ளது.

ஈரானின் அணுத் திட்டம் காரணமாக அந்நாட்டின் மீது 2012ல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. அதன் பின், உலகின் செல்வாக்குமிக்க நாடுகள் ஈரான் அரசாங்கத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையையடுத்து ஈரான் மீதான தடைகள் ஜனவரியில் நீக்கப்பட்டன.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இரண்டு மடங்காக அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

Related posts: