அதிருப்தியில் பிரித்தானிய மக்கள்..!

Monday, November 21st, 2016

பிரித்தானியாவில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையை சீரமைக்கும் நடவடிக்கைகள் நடைபெற உள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் பல பகுதிகளாக நடைபெறவுள்ள சீரமைப்பு பணிகளுக்கு சுமார் 369 மில்லியன் பவுண்டுசெலவிடப்பட உள்ளதாக பிரித்தானிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், பிரித்தானிய மக்களின் வரிப்பணத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையை புதுப்பிக்க அந்நாட்டில் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதற்கான செலவை ராணியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அந்நாட்டில் கையெழுத்து இயக்கம் ஒன்றும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்த போராட்டத்திற்கு 15,000 பேர் வரை ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இதனை மேலும் தீவிரமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரித்தானியாவில் மக்களாட்சி நடைபெற்று வந்தாலும், அந்நாட்டில் பிரதமரை விட அதிக மரியாதை உள்ள நபர்களாக பிரித்தானிய அரச குடும்பத்தினர் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 Untitled-1 copy

Related posts: