சீனா – ரஷ்யா இடையில் முதலாவது பாலம் திறப்பு!

Tuesday, June 14th, 2022

சீனா – ரஷ்யா இடையிலான முதலாவது பாலம் நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.

Amur ஆற்றின் குறுக்காக 19 பில்லியன் ரூபிள் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் சுமார் 1 கிலோமீட்டர் நீளத்தில் கிழக்கு ரஷ்ய நகரமான Blagoveshchensk-ஐ வடக்கு சீனாவின் Heihe-உடன் இணைக்கின்றது.

உக்ரைன் போர் காரணமாக தடைப்பட்டுள்ள விநியோக நடவடிக்கைகளை இதன் மூலம் சரிப்படுத்தி, வர்த்தக நடவடிக்கைகளை இரு நாடுகளும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளன.

உக்ரைன் போர் காரணமாக சர்வதேச நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: