மொஸ்கோ அச்சகத்தில் தீ – 16 பேர் பலி!
Sunday, August 28th, 2016
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஓர் அச்சகம் மற்றும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அதிகாரிகள் பேசுகையில், தீ சுவாலைகள் இருந்ததால் நெருங்க முடியாத ஓர் அறையின் சுவரை உடைத்துச் சென்ற தீயணைப்பு வீரர்களால் இறந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றனர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முந்தைய சோவியத் குடியரசு பகுதியாக இருந்த இடங்களில் இருந்து வந்த குடியேறிகள் ஆவார்கள். இவர்கள் பண்டகசாலையில் வசித்து வந்தனர்.அதிகாரிகள் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்
Related posts:
அமெரிக்காவால் விரைவில் விதிக்கப்படவுள்ளத் தடை!
14 சிங்கங்கள் தப்பி ஓட்டம் – அச்சத்தில் மக்கள்!
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்த இணக்கம் - இந்தி...
|
|
|


