14 சிங்கங்கள் தப்பி ஓட்டம் – அச்சத்தில் மக்கள்!
Monday, June 10th, 2019
தென் ஆப்பிரிக்காவின் மிருகக் காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள மிருக காட்சி சாலையில் ஏராளமான சிங்கங்கள் உள்ளன. அவற்றில் 14 சிங்கங்கள் அங்கிருந்து திடீரென மாயமாகிவிட்டன. அவை அங்கிருந்து தப்பி வெளியேறிவிட்டதாக பூங்கா அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அவை தேசிய பூங்கா அருகேயுள்ள பலாபோர்வா நகரில் உள்ள போஸ்கோர் பாஸ்பேட் சுரங்கம் பகுதியில் சுற்றி திரிகின்றன. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தப்பி ஓடிய சிங்கங்களை பிடிக்க ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
ஜல்லிக்கட்டு...! மேலும் ஒருவர் பலி...!!
தேர்தல் வன்முறை: ஆப்கானிஸ்தானில் 32 பேர் பலி!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் - எரிபொருள் வழங்க தயாராகும...
|
|
|


