அமெரிக்காவால் விரைவில் விதிக்கப்படவுள்ளத் தடை!
Tuesday, May 30th, 2017
அமெரிக்க சென்று திரும்பும் அனைத்து வானூர்திகளிலும் மடி கணினி கொண்டுச் செல்ல விரைவில் தடை விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜோன் கெல்லி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சகல வானூர்தி நிலையங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா வந்து செல்லும் அனைத்து வானூர்திகளிலும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க மக்கள் உள்ள வானூர்திகளை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் துருக்கி ஆகிய 10 வானூர்தி நிலையங்களில் இருந்து மடிக்கணினிகளை எடுத்துவர அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு!
சோமாலியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 17 பொலிஸார் பலி!
எந்நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் -வடகொரியா !
|
|
|


