டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகியுள்ளார்!

Thursday, February 16th, 2017

 

அமெரிக்காவிற்கான  ரஷ்ய தூதுவரோடு ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் குறித்து தவறான தகவல்களை  நிர்வாகத்திற்கு வழங்கினார் என்று  எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் பதவி விலகியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னரே, அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு புறம்பான  வகையில், ரஷ்ய தூதுவரோடு கலந்துரையாடியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜெனெரல் கெய்த் கெல்லோக் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Michael-Flynn-1024x683

Related posts: