அணு உற்பத்தி நிலையம் தொடர்பிலும் விவாதம் இடம்பெறலாம்..!

Saturday, November 23rd, 2019

மத்திய ஜப்பான் நகரான நாகோயாவில் நடைபெறும் வெளிவிவகாரத்துறை அமைச்சர்களின் ஜீ 20 உச்சி மாநாட்டில், புக்குஷிமா அனு உற்பத்தி நிலையம் தொடர்பான விவாதமும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூமி அதிர்வு மற்றும் சுனாமி கடல் சீற்றம் காரணமாக புக்குஷிமா அனு உற்பத்தி நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக தென் கொரியா எச்சரித்திருந்தது.

தென் கொரியாவின் இந்த கூற்றை ஜப்பான் முற்றாக நிராகரித்துள்ள நிலையில், இரண்டு நாள் ஜீ 20 உச்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில், ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு இடையேயான புலனாய்வு தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் நிறைவடையவுள்ளது.

அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு இடையே பாரிய மாறுபட்ட கருத்துக்கள் எதுவும் இல்லாதபோதும், அண்மைக்காலத்தில் வர்த்தகம் தொடர்பான சில மாறுபட்ட செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டாவது உலகப்போரின் போது, ஜப்பானிய நிறுவனங்களில், தென் கொரிய ஊழியர்கள் பலவந்தமாக பணிக்கு அமர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இதற்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தென் கொரியா தொடர்ச்சியாக கோரிவருகின்றது.

தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் சில மூலப்பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை இடைநிறுத்தவுள்ளதாக தென் கொரியா அச்சுறுத்தி வருகின்றது.

அப்படியான நடவடிக்கைகளை தென் கொரியா மேற்கொள்ளும் பட்சத்தில், தென் கொரியாவின் மூலப்பொருட்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சர்வதேச சந்தையில் விநியோகிக்கும் ஜப்பானின் நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related posts:

நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதைப் போன்று சீனா மற்றும் ஜப்பானிடமிரு...
கடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்று 900 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!
வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதில் தாமதம் - தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பாவனையில் - சுற்றாடல்...