சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலம் பணியாற்ற சீன மக்கள் கட்சியினால் ஏகமனதாக ஒப்புதல்!

Friday, March 10th, 2023

சீனாவில் மாவோ சேதுங்கிற்குப் பின்னர் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஷி ஜின்பிங் வரலாற்றில் பதிவு பெற்றார்.

இந்நிலையில் சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலம் பணியாற்ற சீன மக்கள் கட்சியினால் அவருக்கு ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் 3,000 பேரைக்கொண்ட தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) உறுப்பினர்கள் ஷி ஜின்பிங்குக்கு ஏகமனதாக வாக்களித்தனர்.

ஒரு மணி நேர வாக்கெடுப்பின் முடிவுகள் மின்னணு அமைப்பு மூலம் 15 நிமிடங்களில் எண்ணப்பட்டன. முடிவில் 69 வயதான ஜி ஜின்பிங் மீண்டும் சீனாவின் ஜனாதிபதியாக தெரிவானார்.

2018 இல் ஜனாதிபதி பதவிக் கால வரம்புகளை நீக்கிய பின்னர் அவர் தனது மூன்றாவது பதவிக்காலத்திற்கான களத்தை அமைத்தார்.

ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளராக மேலும் ஐந்தாண்டுகளுக்கு தனது பதவிக் காலத்தை நீடித்த ஷி, கட்சியின் பாரம்பரியத்தைப் பேணும் வகையில் இன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஷி ஜின்பிங் அடுத்த இரண்டு நாட்களில் அமைச்சரவைக்கு உறுப்பினர்களை நியமிப்பார் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரதமரான லி கியாங்கிற்கு ஒதுக்கப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: