அமெரிக்க தடை உத்தரவால் எதிர்மறை விளைவு ஏற்படும் இந்தோனேசியா எச்சரிக்கை!

Tuesday, January 31st, 2017

சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த நாடுகளுக்கு தடை பயங்கரவதத்துக்கு எதிரான போராட்டத்தை காயப்படுத்தியுள்ளது என்று இந்தோனேசியா கருத்து தெரிவித்துள்ளது.

சிரியா அகதிகள் நுழைய நிரந்தரத் தடையும், ஈரான், ஈராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதித்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தடை உத்தரவு குறித்து இந்தோனேசியா வெளியுறவு அமைச்சர் அர்மனந்தா நாசீர் நேற்று கூறும்போது,

7 இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை அந்த நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்டது. இந்த தடையில் இந்தோனேசியா நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும் அமெரிக்காவின் இந்த முடிவு வருத்தம் அளிக்கிறது. இம் முடிவு உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை காயப்படுத்தியுள்ளது. இது நிச்சயம் எதிர்மறையான விளைவை உண்டாக்கும் என்றார். இற்தோனேசியா அரசாங்கம் அமெரிக்காவில் உள்ள தங்களது குடிமக்களுக்கு உரிமைகள் மற்றும் உள்ளுர் சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவின் இந்த முடிவால் இந்தோனேசியாவின் ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்றும் அந்த நாட கண்காணித்து வருகிறது. உலகளவில் முஸ்லிம்கள் அதிகமுள்ள நாடு இநதோனேசியா என்பது குறிப்பிடத்தக்கது.

14-indo200

Related posts: