மே மாதம் 18 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல்!
Thursday, April 11th, 2019
அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 18 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக, அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் (Scott Morrison) அறிவித்துள்ளார்.
பிரதிநிதிகள் சபையின் 151 ஆசனங்களுக்குமான தேர்தல் இதன்போது நடாத்தப்படவுள்ளது.
இதில் காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பாரிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கன்சர்வேட்டிவ் அரசாங்கம் மூன்றாவது தடவையாக வெற்றி பெறுமா அல்லது தொழிற்கட்சியினரிடம் தோல்வியடையுமா என்பதை, இந்தத் தேர்தல் தீர்மானிக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
பிலிப்பைன்ஸில் மாணவர்களுக்கு போதை மருந்து சோதனை!
பிரேசில் முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு!
அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்கியது வடகொரியா !
|
|
|


