அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்கியது வடகொரியா  !

Tuesday, February 27th, 2018

அமெரிக்காவுடன் திறந்த அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.

தென்கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வடகொரிய இராஜதந்திரி கிம் யொங் சொல் இதனை தெரிவித்துள்ளார். தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் உடனான சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் யுன் அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள விருப்பத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இது தொடர்பில் வெள்ளை மாளிகை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் வடகொரியா முழுமையானதும் உறுதிப்படுத்தப்படுவதும் மற்றும் மீள இடம்பெறாததுமான அணுவாயுத கலைவை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் மாத்திரமே அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Related posts: