இந்திய வம்சாவளியினரை கண்டு வியக்கிறேன்- நன்றி சொன்ன டிரம்ப்!

Monday, December 19th, 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச் செய்த இந்திய வம்சாவளியினர் அனைவருக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றி என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அண்மையில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிரம்ப் அமெரிக்காவில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாகாணங்களில் நேரடியாக சென்று நன்றியை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் புளோரிடா மாகாணம், ஆர்லண்டோ நகரில் பொதுமக்கள் முன்னிலையில் பேசினார்.அப்போது ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி என்றும் இந்திய வம்சாவளியினருக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த கூட்டத்தில் பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் இருக்கின்றனர். இந்துக்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். தான் அவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

இந்தியர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் வியப்பு அளிப்பவர்கள். அவர்கள் நமக்கு வாக்களித்தார்கள். அவர்கள் அற்புதமானவர்கள் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசு கட்சி இந்து கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்று பேசிய போது, இந்தியா, அமெரிக்கா உறவு வலுப்படுவதற்கு தான் மிகவும் பாடுபடுவேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: