மேலதிக வரி விதிப்பை விலக்கிக்ய டொனால்ட் ட்ரம்ப் !

Sunday, June 9th, 2019

மெக்ஸிகோவுக்கு மேலதிக வரிகளை விதிப்பதற்கான உத்தரவை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத புகழிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏற்பட்ட இணக்கப்பாட்டின் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ மீதான வரி விதிப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதற்கமைய, மாதத்திற்கு நூற்றுக்கு 5 வீதம் என்ற அடிப்படையில், 5 மாதத்திற்குள், மெக்ஸிகோவிற்கான ஏற்றுமதிக்காக நூற்றுக்கு 25 வீத வற் வரியை விதிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், சட்டவிரோத புகழிடக் கோரிக்கையாளர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், மெக்ஸிகோவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: