அவுஸ்ரேலியாவுக்கு எதிராக கிழக்கு திமோர் வழக்கு!

Thursday, September 29th, 2016

அவுஸ்திரேலியா மற்றும் கிழக்கு திமோருக்கு இடையில் ஒரு தசாப்தமாக நீடிக்கும் கடல் எல்லை பிரச்சினையை நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

கடலுக்கு அடியில் இருக்கும் பெருமளவான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தின் உரிமையை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என கிழக்கு திமோர் எதிர்பார்க்கிறது. 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய வருவாயை பகிர்ந்துகொள்ளும் திட்டம் நியாயமற்றது என கிழக்கு திமோர் குறிப்பிடுகிறது.

இந்த பிரச்சினை குறித்து தீர்ப்பு அளிக்க சர்வதேச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று அவுஸ்திரேலியா குறிப்பிடுகிறது. கடந்த ஏப்ரலில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கிழக்கு திமோரே இந்த வழக்கை தொடுத்தது.

2002 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற கிழக்கு திமோருக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நிரந்தர கடல் எல்லை நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எல்லை பிரிக்கப்படுவதற்கு அவுஸ்திரேலியா எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது.திமோர் கடலில் பெறப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு வாருவாயை பகிர்ந்து கொள்ள இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடொன்று அமுலில் உள்ளது.

coltkn-09-28-fr-03172836379_4814632_27092016_mss_cmy

Related posts: