அமெரிக்காவில் வௌ்ளம்! ஐவர் உயிரிழப்பு

Tuesday, March 15th, 2016
அமெரிக்காவில் தொடரும் மழையுடனான காலநிலையால் மக்கள் பெரும் அசெகளரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் வீசிய புயல் காற்றினால் ஐந்து பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
லூசியான பகுதியில் 3000 மக்களையும் 300 செல்லப்பிராணிகளையும் மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
தென் அமெரிக்க பிராந்தியங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதுடன் வெள்ள நிலை பெருக்கெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
லூசியான மற்றும் மிசிசிப்பி பிராந்தியங்களில் பெய்து வரும் கன மழை காரணமாகவும் வௌ்ளம் காரணமாகவும் வீதிப் போக்குவரத்துகள் மற்றும் பொது சேவைகள் என்பன முடங்கிப் போயுள்ளன.
லூசியானா மற்றும் மிசிசிப்பி பகுதிகளில் இருந்து அதிகளவில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் கன மழை காரணமாக வீடுகளும் அதிகளவில் சேதமடைந்துள்ளன.
வௌ்ள நீரினால் லூசியானா பகுதியில் 5000 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் நான்கு பேர் வரை உயிரிழந்துள்ளனர்.ஒக்லஹாமா பகுதியில் வௌ்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பல ஆறுகள் மற்றும் ஏரிகள் வரலாற்றில் இல்லாதவாறு நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதாகவும் ஆகவே அருகாமையில் வசிக்கும் மக்களை இடம்பெயருமாறும் அந்த நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மிசிசிப்பி பகுதியில் கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.இந்த பகுதியில் சுமார் 185 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: