சிரியாவில் தொடரும் மோதல்கள்: மீட்பு முயற்சிகள் பாதிப்பு ஐ.நா!

Friday, September 2nd, 2016

சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு உதவிகளை கொண்டு செல்ல எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சிகள் அங்கு நடைபெற்று வரும் மோதல்களால் சீர்குலைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடும் ஊட்டச்சத்தின்மை மற்றும் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வரும் தராயா என்ற நகரில், பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் திட்டத்தை தாங்கள் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான ஆலோசகர் ஜான் ஈக்லேண்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்குள்ள நெருக்கடி நிலை தாங்க முடியாத ஒன்றாக இருப்பதாகவும் அவர் வர்ணித்துள்ளார்.

சிரியா விவகாரம் தொடர்பாக ரஷியாவும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், ஓர் அரசியல் தீர்வு எட்டப்படும் என நம்புவதாகவும் சிரியாவுக்கான ஐ.நா தூதர் ஸ்டெஃப்பான் டி மிஸ்டிரோ தெரிவித்துள்ளார்.

160901112852_hama_syria_640x360_afp_nocredit

Related posts: