சர்வதேச சட்டங்களை சீனா  மீறுகிறது –  அமெரிக்கா குற்றச்சாட்டு!

Monday, May 29th, 2017

தென்சீனக் கடல் பகுதியில் பறந்த அமெரிக்க உளவு விமானத்தை சீன போர் விமானங்கள் இடைமறித்து திருப்பியனுப்பியதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறி சீனா செயற்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஹொங்கொங்கின் தென் கிழக்கே 240 கி.மீ. தொலைவில் தென்சீனக் கடலில் பறந்த அமெரிக்க கடற்படையின் உளவு விமானத்தை சீன விமானப் படையின் 2 போர் விமானங்கள் வழிமறித்தன.

இதனால் கடும் அதிருப்தியடைந்துள்ள அமெரிக்கா, இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், “சர்வதேச சட்டங்களை மீறி சீனா செயற்படுகிறது. எங்களது விமானம் சர்வதேச எல்லையிலேயே பறந்தது. அதனை சீன போர் விமானங்கள் இடைமறித்துள்ளன. இதுதொடர்பாக எங்களது கண்டனத்தை சீன தரப்பிடம் பதிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது.

தென்சீனக் கடலில் சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவுக்கு மிக அருகில் கடந்த 24ஆம் திகதி அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். டெவ்வி என்ற போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டதற்கு சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: