அகதிகள் நெருக்கடி – லெபனானுக்கு உதவி செய்ய பிரான்ஸ் இணக்கம்!

Sunday, September 3rd, 2017

சிரிய அகதிகள் தொடர்பான நெருக்கடியை சமாளிப்பதற்கான முயற்சிகளில் பிரான்ஸ் அரசாங்கம் முன்னின்று செயற்படும் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், லெபனான் பிரதமர் சாட் ஹரிரியிடம் உறுதியளித்துள்ளார். எலிஸி மாளிகையில் இடம்பெற்ற இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பினை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின் போது, சிரிய அகதிகளுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு லெபனானுக்கு முதலீடுகளை வழங்க பிரான்ஸ் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டு காலங்களில் சுமார் 1 தசம் 5 மில்லியன் சிரியர்கள் லெபனானுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்த எண்ணிக்கையானது, லெபனான் மக்கள் தொகையின் நான்கில் ஒரு பகுதியாகும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த அகதிகள் நெருக்கடியால் லெபனான் சமூக மற்றும் நிதி சுமையை எதிர்நோக்கியிருப்பதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts: