வடகொரிய ஜனாதிபதிக்கு தனிப்பட்ட கடிதம் அனுப்பியுள்ள அமெரிக்க ஜனாதிபதி!

Monday, June 24th, 2019

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அன்னுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனிப்பட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என வடகொரிய ஊடகம் தெரித்துள்ளது.

அந்தக் கடிதத்தை, சிறந்தது என கிம் ஜோங் அன் பாராட்டியதுடன், அது குறித்து விசேட அவதானத்துடன் செயற்பட உள்ளதாக கூறினார் என்றும் கொரிய மத்திய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

தடைகளை நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால், இரு தலைவர்களுக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம், வியட்நாம் தலைநகர் ஹனோயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் கடிதம் அனுப்பிவைத்துள்ளமையானது, பல மாதங்களுக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பாரிய மேம்பாட்டை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது நாட்டு எல்லையை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என ஈரான் அறிவித்துள்ளது. அத்துடன், அமெரிக்க ஆக்கிரமிப்பு எச்சரிக்கைக்கு பதிலளிப்பதற்கு தயார் என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வளைகுடாவில் ஈரான் கடற்பரப்புக்கு அருகில் பயணித்த அமெரிக்க ஆளில்லா வானூர்தி ஒன்று ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவித்தலை ஈரான் வெளியிட்டுள்ளது

Related posts: