4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது ரஷ்யா!

Sunday, October 29th, 2017

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த 4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வீசி ரஷ்யா சோதனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், வடகொரியா மீது ஐ.நா. பொருளாதார தடை விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த 4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வீசி சோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் அனைத்தும் நீண்ட தூரம் சென்று தாக்க கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘டியூ-160, டியூ-95 எம்.எஸ். மற்றும் டியூ-22 எம் 3’ ஆகியவையும் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் வகையிலான ஏவுகணைகளும் நேற்று(26) பரிசோதிக்கப்பட்டன.

இச்சோதனை ரஷ்யாவின் வடமேற்கில் உள்ள பிலெட்ஸ் இராணுவ தளத்தில் நடந்த வீரர்கள் பயிற்சியின் போது நடத்தப்பட்டதாகவும் இவை கஜகஸ்தானில் உள்ள குரா என்ற இடத்திலுள்ள சோதனை மையத்தை குறி வைத்து தாக்கின என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக ரஷ்ய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts: