பிரித்தானியாவில் ஐந்துலட்சம் குடியேறிகளுக்கு வதிவிட அனுமதி!

Saturday, July 27th, 2019

சட்டபூர்வ வதிவிட அனுமதியை பெறாமல் பிரித்தானியாவில் தங்கியுள்ள சுமார் ஐந்துலட்சம் குடியேறிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களை பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் பதவியில் முதலாவது முழுமையான நாளுக்குரிய நிகழ்ச்சி நிரலை நகர்த்திய பொறிஸ்ஜோன்சன், புதிய பிரதமர் என்ற வகையில் நாடாளுமன்ற அமர்விலும் பங்கெடுத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே இதனை தெரிவித்தார்.

ஈழத்தமிழர்கள் உட்பட பிரித்தானியாவில் சட்டபூர்வ வதிவிட அனுமதியில்லாமல் சுமார் ஐந்துலட்சம் குடியேறிகள் நீண்டகாலமாக வாழும் நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறிஸ்ஜோன்சன் லண்டன்நகரின் முதல்வராக இருந்தவேளை பிரித்தானியாவில் சட்டபூர்வ வதிவிட அனுமதியில்லாமல் வாழும் குடியேறிகளுக்கு வதிவிடஅனுமதியை வழங்கும் பரிந்துரையை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: