நாட்டில் நுரையீரல் தொடர்பாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணிப்பதற்கான அதிர்ச்சி காரணமும் வெளியானது!

Saturday, December 10th, 2022

இலங்கையில் நுரையீரல் தொடர்பாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதில் பாதி பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரியின் சட்டத்தரணி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்ட மரண விசாரணை அதிகாரியின் சாட்சியப் பரிசோதனையில் இது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐஸ் போதைப்பொருள் பாவனையில் நேரடியாக ஈடுபடும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 2 அல்லது 3 வருடங்களில் உயிரிழப்பார்கள் எனவும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்த முதியவர்கள் தற்போது ஐஸ் போதைப்பொருளுக்கு மாறியுள்ளமையினால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


புட்டியில் ஊற்றிக் கொடுக்கும் பாலைக்கூட குடிக்க முடியாதவர்கள் வடமாகாண சபையினர் - அமைச்சர் நிமால் சிற...
மாநகரசபையிடம் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டம் கிடையாது - சுட்டிக்காட்டுகிறார் யா...
ஜனாதிபதி, பிரதமர் நாட்டில் இல்லாத வரலாற்றுச் சம்பவம் இலங்கையில் பதிவு - நாட்டின் தற்காலிக தலைவரானார்...