தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியது!

Tuesday, May 17th, 2016

தமிழகத்தில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ரைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணி 139 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள் 78 தொகுதிகள் வரை வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது.

பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும், பிற கட்சிகள் 17 இடங்கள் வரை வெற்றி பெற வாய்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம் நடத்தப்பட்ட Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தமுள்ள 232 தொகுதிகளிலும் ( 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.) நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம், வெவ்வேறு ஊடகங்கள் நடத்தியுள்ள Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

News NationTV

அதிமுக 35 சதவீத வாக்குகளுடன் 95 முதல் 99 இடங்களை கைப்பற்றும் என்றும், திமுக 39 சதவீத வாக்குகளுடன் 114 முதல் 118 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நலக்கூட்டணி 14, பா.ஜனதா 4, இதர கட்சிகள் 9 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

India Today-Axis My India

அதிமுக 89 முதல் 101, திமுக 124 முதல் 140 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 0-3, மற்ற கட்சிகள் 4 – 8 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Times Now TV

அதிமுக 139, திமுக 78, மற்ற கட்சிகள் 17 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: