சீனாவின் ஆய்வுகூடத்திலிருந்தே வைரஸ் உருவாகியது: பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என கூறுகின்றார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

Monday, May 4th, 2020

சீனாவின் ஆய்வுகூடத்திலிருந்தே புதிய கொரோனா வைரஸ் உருவாகியது என்பதற்கான பெருமளவு ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

வுகானின் ஆய்வு கூடத்திலிருந்தே இந்த வைரஸ் உருவானது என்பதற்கான பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என அவர் ஏபிசியின் திஸ் வீக்கிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதே தலைசிறந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது என மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.இதனை நம்பமாலிருப்பதற்கான காரணங்கள் எதுவும் என்னிடமில்லை எனவும் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்படவில்லை எனஅமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருப்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரசினால் ஏற்பட்ட பாதிப்பின் அளவை சீனா மறைத்தது,வைரசினால் ஏற்படக்கூடிய ஆபத்தை மறைத்தது என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ சீனா மருந்துகளை இரகசியமாக சேமித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கின்றது என்பதை உலகம் தக்க தருணத்தில் அறிந்துகொள்ளாமலிருப்பதற்காக சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி அனைத்தையும் செய்தது எனவும் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். வைரசிற்கு காரணமானவர்களை பொறுப்புகூறச்செய்யப்போகின்றோம்,அமெரிக்க ஜனாதிபதி இது குறித்து தெளிவாகவுள்ளார் எனவும் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்

Related posts: