முகக் கவசங்கள் அணிவதால் மட்டும் கொரோனா தொற்றை தடுத்துவிட முடியாது – உலக சுகாதார அமைப்பு !

Tuesday, April 7th, 2020

முகக்கவசங்கள் அணிவதன் ஊடாக மாத்திரம் கொவிட் 19 வைரஸ் தொற்றை அழிக்க முடியாது எனவும், அது வைரஸை அழிப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்லவெனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அடிக்கடி கைகளை கழுவ முடியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் இடைவெளியை பேண முடியாதவர்களுக்கே கட்டாயமாக முகக்கவசங்கள் அவசியமாகின்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெடோஸ் எடனம் கிரேபியஸ் குறிப்பிட்டார்.

போதிய நீர் இல்லாதவர்கள் மற்றும் சன நெரிசலை தவிர்க்க முடியாதவர்களுக்கு முகக்கவசங்களின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது, சுகாதார ஊழியர்களுக்கு முகமூடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகளின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.

Related posts: