தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கு நடவடிக்கை – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை!

Thursday, October 28th, 2021

கொவிட் தொற்று காரணமாக முன்னெடுக்கப்படாமலிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க, பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து அமைச்சில் இன்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மேற்படி பணிப்புரையை அமைச்சர் வழங்கியுள்ளார்.

இக்கலந்துரையாடலின்போது பேருந்து வீதி அனுமதிக் கட்டணம் செலுத்துவதற்கும் குத்தகைக் கடன் தவணைகளை செலுத்துவதற்கும் சலுகைக் கால அவகாசம் வழங்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதி அனுமதிப்பத்திரமின்றி, அலுவலக சேவை என்ற அடிப்படையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அதிகாரிகளுக்கு இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அடுத்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் உச்சமடையும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!
சர்வதேச தரப்பின் தலையீட்டுக்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு உள்ளக பொறிமுறையை பயன்படுத்துவதே சிறந்தது –...
பொதுப்போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வு காண நிபுணர்களின் ஆலோசனைகள...