தென்கொரியாவில் 8,000 இலங்கையருக்கு தொழில் – மனுஷவுடன் கொரிய மனிதவள திணைக்களம் உடன்பாடு!

Thursday, April 27th, 2023

தென்கொரியாவில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கையை இம்முறை 8,000 ஆக அதிகரிக்க கொரிய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் கொரிய மனிதவள திணைக்களத்தின் பிரதானிகளுக்குமிடையே நேற்று (26) நடைபெற்ற சந்திப்பின் போதே, கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பிரதானி, இலங்கையருக்கான தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரிக்க உடன்பாடு தெரிவித்துள்ளார்.

கொரியமொழி ஆற்றலைக்கொண்டு அதாவது தற்போது இணையத்தள பதிவின் மூலம் தயாரிப்புப் பிரிவில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள 600 பேரை, கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, தயாரிப்புத் துறைகளில் தொழில் வாய்ப்பு எதிர்பார்ப்பில் இணையத்தளத்தில் பதிவை மேற்கொண்டுள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் தொழிலுக்காக மாற்றிக்கொள்ள முடியும். குறிப்பிட்ட இணையத்தள பதிவு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகி விடும் என்பதால், இதற்கு முன்னதாக கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கையை எட்ட எதிர்பார்ப்பு – பிரதமர் தெரிவ...
கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் 16 பேர் பலி - 98 பேர் காயம் – இலங்கையில் தொடர்கின்றத...
இலங்கையில் ஆண்களுக்கு தட்டுப்பாடு - திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதா...