இலங்கை –  பாகிஸ்தானிற்கு இடையிலான ஒரு நீடித்த நட்பு நூல் வெளியீடு!

Thursday, August 17th, 2017

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நல்லுறவு 2,300 ஆண்டுகளிற்கு முன்பிருந்தே இடம்பெற்று வருவதாக இலங்கையிலுள்ள பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் ஷவ்ராஸ் அகமட் கான் ஷிப்hறா தெரிவித்துள்ளார்.

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் முன்னாள் பிரதமர் அமரர் டி.எஸ்.சேனநாயக்க பாகிஸ்தானிற்கு விஜயம் செய்து பாகிஸ்தானின் ஸ்தாபகரான குவைட் ஐ அசாம் முஹம்மட் அலி ஜின்னாவை சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானியராலயத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கு இடையிலான ஒரு நீடித்த நட்பு என்ற நூல் வெளியீட்ட விழாவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.பாகிஸ்தானின் 70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அவரிடம் பாகிஸ்தானின் பதில் தூதுவர் இந்த நூலை கையளித்தார்.

Related posts: