வலுக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் – இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்!

Monday, October 9th, 2023

இஸ்ரேல் தரப்பினருக்கும் ஹமாஸ் ஆயுததாரிகளுக்கும் இடையிலான மோதல் தொடரும் நிலையில் இஸ்ரேல் மற்றும் காசாவில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக 1 லட்சத்து 23 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்களில் சுமார் 74 ஆயிரம் பேர் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேலில் ஹமாஸ் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்ரேலிய இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தில் இருந்து 250 க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய மீட்புக் குழு இதனை தெரிவித்துள்ளது.

அத்துன் குறித்த தாக்குதலில், 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் பலர் பணயக் கைதிகளாக காசாவில் சிறை அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், அவசர உதவிகள் மூலம், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அதிகரித்த ஆதரவை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிப்பதோடு பயங்கரவாதம் தீர்வுகளை கொண்டுவருவதில்லை, மரணத்தை மட்டுமே கொண்டு வருகின்றது

மேலும் போர் ஒரு தோல்வி. ஒவ்வொரு போரும் தோல்விதான். எனவே போரை உடனடியாக நிறுத்தும்படி இருதரப்பையும் வேண்டுகிறேன்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

000

Related posts: