ரஷ்யா – உக்ரைன் போர்ப் பதற்றம் – உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்ப மாட்டோம் என்று போலந்து அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022

உக்ரைனுக்கு ஆதரவாக, 50 கோடி டாலர் மதிப்புள்ள போர் விமானங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை அனுப்பிவைக்க ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கடந்த மாதம் 27 ஆம் திகதி முடிவு செய்திருந்தனர்.

அதேவேளை உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்ப மாட்டோம் என்று போலந்து அறிவித்துள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து போலந்து அதிபர் அன்ட்ரெஜ் துடா தெரிவித்திருப்பதாவது – 

ரஷ்யா – உக்ரைன் போரில் போலந்து இணையவில்லை. ‘நேட்டோ’ அமைப்புக்கும் இதில் சம்பந்தம் இல்லை. உக்ரைனுக்கு நாங்கள் மனிதாபிமான உதவி அளித்து வருகிறோம்.

இருப்பினும், போர் விமானங்களை அனுப்ப மாட்டோம். அப்படி அனுப்புவது போரில் தலையிடுவதாக அர்த்தம் ஆகிவிடும் என்று அவர் கூறினார்.

போலந்து அதிபர் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும் போது, ‘நேட்டோ’ பொதுச்செயலாளரும் உடன் இருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் நிலவரம் குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை இன்று போலந்து அதிபர் நடத்துகிறார்.

இந்நிலையிலேயே ‘நேட்டோ’ அமைப்பில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடான போலந்து, உக்ரைனுக்கு போர் விமானத்தை அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: