பெய்ஜிங்கில் நச்சுப்புகை காரணமாக 5 நாட்களுக்கு அதி உயர் எச்சரிக்கை!

Saturday, December 17th, 2016

சீன தலைநகரான பெய்ஜிங்கில் நச்சுப்புகையின் அளவு மிக அதிகமாக இருப்பதால் ஐந்து நாள் அதி உயர் எச்சரிக்கையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கை காரணமாக, அடுத்த ஐந்து நாட்கள் பெய்ஜிங்கில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட கார்கள், இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். மேலும், பெருமளவு மாசு ஏற்படுத்தும் சில தொழிற்சாலைகள் மூடப்பட உள்ளன.

வடகிழக்கு சீனாவில் உள்ள சுமார் 20 நகரங்களும் இதே போன்ற நச்சுப்புகை எச்சரிக்கைகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்தப் பிரச்சனையை சமாளிக்க எந்தவித கூடுதல் முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்ற விரக்தி பொதுமக்களிடம் பரவலாக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பெய்ஜிங் அதிகாரிகள் ஒரே ஒரு முறைதான் இதுபோன்று அதி உயர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த முடிவு பெரும்பாலும், பொதுமக்கள் பாதுகாப்பை விட, அரசியல் சார்ந்ததாகவே உள்ளதாக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

_92995582_gettyimages-502376968

Related posts: