மெக்ஸிகோ எல்லையில் சுவருக்கு பதிலாக பாலம்-  ஐரோப்பிய ஒன்றியம் !

Wednesday, May 10th, 2017

மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் அமைப்பதற்கு மாறாக பாலம் அமைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் சிசிலியா மாம்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஐரோப்பிய வர்த்தக ஆணையாளர், மெக்ஸிகோவுடன் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்ற நிலையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “உலகின் மிகப்பெரிய வர்த்தகராக ஐரோப்பிய ஒன்றியம் காணப்படுகின்ற நிலையில், வர்த்தக உடன்படிக்கைகளில் சிறந்த தொழிலாளர் சட்டங்களை பேணல், வெளிப்படைத்தன்மை, உயர் தரங்களை பராமரித்தல், பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தல் என்பன அவசியமாகும்.

இதனை அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். ஆனால் அதற்கு அமெரிக்கா ஒத்துழைக்காத பட்சத்தில் அதனை பிற நண்பர்களுடனும், பங்குதாரர்களுடனும் இணைந்து முன்னெடுத்துச் செல்வோம்.அதன்படி மெக்ஸிகோவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய வர்த்தக ஒப்பந்தம், மெக்ஸிகோவின் வேளாண்மை பொருட்கள், மாட்டிறைச்சி, சர்க்கரை, வாழைப்பழம் போன்றவற்றின் வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் அமையும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: