கொரோனா பரவல் தொடர்பில் புதிய தகவல் – வுஹான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

Tuesday, April 14th, 2020

கொரோனா வைரஸின் பரவல் தொடர்பில் சீனாவின் வுஹானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று புதியதொரு விடயத்தினை கண்டறிந்துள்ளது.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த விடயங்கள் கண்டறியப்பட்டள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்ட நோயாளியை சுற்றியுள்ள வளிமண்டலத்தின் 6 அடிக்குள்ளேயே குறித்த வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதன்போது கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர் பயன்படுத்திய கணினிகள், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பிற சாதனங்களில் குறித்த வைரஸினை அவதானிக்க முடிவதாகவும் குறித்த ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.

இதனிடையே ஷூக்களின் அடிப்பாகம் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவலாம் என்பது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, மருத்துவமனை மற்றும் மருந்தகப் பணியாளர்கள் தங்கள் ஷூக்களை கிருமிநீக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் ஷூக்களின் அடிப்பாகம் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவும் என சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆகவே, மருத்துவமனை மற்றும் மருந்தகப் பணியாளர்கள் தங்கள் தங்கள் ஷூக்களை கிருமிநீக்கம் செய்யுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன், கொரோனா தொற்றிய நோயாளிகள் நடமாட்டம் இல்லாத, மருத்துவ பணியார்கள் மட்டுமே நடமாடும் மருந்தகங்களின் தரையிலும் கொரோனா வைரஸ் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

ஆகவே, கொரோனா தங்கள் ஷூக்கள் மூலம் பரவாமல் தடுப்பதற்காக, தங்கள் ஷூக்களை கழுவவும், கிருமிநீக்கம் செய்யவும் மருத்துவமனை மற்றும் மருந்தகப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: