பிரஸல்ஸ் விமான நிலையத்தின் ஒரு பகுதி வழமைக்கு!

Sunday, April 3rd, 2016

பிரஸல்ஸ் விமான நிலையம் மீதான குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுகளுடன் விமான நிலையத்தின் ஒரு பகுதி  மீள திறக்கப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 12 நாட்களின் பின்னரே விமான நிலையத்தின் ஒரு பகுதி  மீள திறக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிரஸல்ஸ் எயார் லைன்ஸ் விமானங்கள் மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய முதலாவது விமானம் போத்துக்கீசின் நகரமான பெரேவிற்கும், இரண்டாவது விமானம் கிரேக்க தலைநகர் எதென்ஸிற்கும், மூன்றாவது விமானம் இத்தாலியின் துரினிற்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளன.

இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி பிரஸல்ஸ் விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் வாயிலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 32 பேர் உயிரிழந்ததுடன் 300 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த விமான நிலையம் மூடப்பட்டதுடன் இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் ஆயுததாரிகள் உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: