ஹிட்லரின் நாசி ஆட்சியை ஒத்தது தற்போதைய ஜேர்மனின் ஆட்சி – துருக்கி ஜனாதிபதி தையீர் ஏர்துவான் குற்றச்சாட்டு!

Tuesday, March 7th, 2017

ஹிட்லரின் நாசி ஆட்சிக்காலத்தை ஒத்ததாக தற்போதைய ஜேர்மன் அரசாங்கத்தின்செயற்பாடுகள் அமைந்துள்ளதாக துருக்கி ஜனாதிபதி தையீர் ஏர்துவான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜேர்மனியில் வசிக்கும் துருக்கிப் பிரஜைகள் ஏர்துவானுக்கு ஆதரவாக மேற்கொள்ளவிருந்தபேரணிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் துருக்கி ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் ஜேர்மன் அரசியல்வாதிகள் அதிர்ச்சியும் ஆத்திரமும்வெளியிட்டுள்ளனர்.

துருக்கி ஜனாதிபதியின் அபத்தமானதும் இழிவானதும் என குறிப்பிட்டுள்ள ஜேர்மன் நீதியமைச்சர், தமது நாட்டைகோபமூட்டுவதற்காக அவர் இவ்வாறான கருத்தை கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் துருக்கி ஜனாதிபதியின் விஜயத்தை தடைசெய்தல் மற்றும் துருக்கியுடனான இராஜதந்திரஉறவுகளை துண்டித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவ்வாறான நகர்வுகள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டீனுடனான உறவுகளை துருக்கி வலுவாக்கும் எனவும்அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை ஆளும் கிறிஸ்டின் ஜனநாயகவாதக் கட்சியின் பிரதித் தலைவர், துருக்கி ஜனாதிபதியின் கருத்து, திட்டமிட்ட ஒன்றெனவும் சிறுபிள்ளைத்தனமானது எனவும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

ஜேர்மன் நகரங்களில் துருக்கி பிரஜைகள் ஏற்பாடு செய்த இரண்டு பேரணிகளுக்கான அனுமதியை அதிகாரிகள்மீளப் பெற்றிருந்தனர்.

துருக்கி ஜனாதிபதி ஏர்துவானுக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழங்குவதற்கு ஆதரவாக குரல்கொடுக்கும்வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த பேரணிகளுக்கான அனுமதியைஇரத்துச் செய்ததாக ஜேர்மன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related posts: