அமைதியை விரும்புவதை பலவீனமாக இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள் – நவாஸ் ஷெரிப்!

Thursday, September 29th, 2016

இந்தியாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தவும்  பாதுகாப்பை சீர்குலைக்கவும் அண்டை நாடான பாகிஸ்தான் பல்வேறு சதிச்செயல்களை அரங்கேற்றி வருகிறது. இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு பரப்புவது, பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து எல்லைக்குள் ஊடுருவச்செய்வது போன்றவற்றின் மூலமாக மறைமுகப்போரில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில், அண்மையில் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை உலக அரங்கில் இந்தியா மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையே,நேற்று பாகிஸ்தான் நாட்டிற்குட்பட்ட பகுதியில், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் தாக்கியது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர், நாங்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அமைதி நீடிக்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை பலவீனமாக நினைக்க கூடாது” என்று கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

nawaz

Related posts: