Monday, April 6th, 2020

கொரோனா தாக்கம்:  கல்லறைகள் நிறைந்ததால் சாலையில் வைக்கப்படும் உடல்கள்!

ஈக்குவேடார் நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களின் உடல்கள் பெரிய கொள்கலனில் சேமிக்கப்படுகிறது.

தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு நாடு ஈக்குவேடார். சுமார் ஒரு கோடியே 66 லட்சம் மக்கள் தொகை கொண்ட வளரும் நடுத்தர நாடாக இது உள்ளது.

இந்நிலையில் மொத்த உலகையும் ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ் ஈக்குவேடாரை மட்டும் விட்டுவைக்குமா? இங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465 ஆக உள்ளதுடன் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடான இங்கு கொரோனா வைரஸ் தினம் தினம் பல கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது.

ஈக்குவேடாரில் மருத்துவமனைகள் மிகக் குறைவு என்பதால் அதற்குள் அனைத்துப் படுக்கைகளும் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஈக்குவேடாரில் அதேபோல் உயிரிழப்புகளும் மிக அதிகமாக இருப்பதாகவும் ஈக்குவேடார் அரசாங்கம் அதை வெளியில் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Related posts: