மீண்டும் அணு உலையை ஆரம்பிக்க நீதிமன்றம் தடை!

Friday, June 17th, 2016

பாதுகாப்பு காரணங்களை காட்டி இரண்டு அணு உலைகள் மீண்டும் இயக்குவதற்கான தடையை ஜப்பானிய நீதிமன்றம் ஒன்று உறுதி செய்துள்ளது.

இந்த அணு உலை பகுதியில் விபத்து ஏற்பட்டால், 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஜப்பானின் மிக பெரிய நன்னீர் எரி ஆபத்துக்குள்ளாகும் என்று வாதிட்ட உள்ளூர் புகாரை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஃபுகுஷிமா அணு உலை வெடிப்பை தொடர்ந்து, தங்களது அணு உலைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஜப்பானிய மின் உற்பத்தி நிறுவனங்கள் போராடி வருகின்றன. இந்த ஆண்டிற்குள் ஜப்பான் அணு மின்சாரத்திற்கு முழுமையாக மாறிவிட வேண்டுமென ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதி அளித்திருக்கிறார்.

ஆனால், நாடு முழுவதும் நீதிமன்ற தடைகள் பெறுவதற்கு நீதிமன்றத்தில் குடிமக்கள் வழக்கு தொடுத்து, பிரதமரின் முயற்சிக்கு சவால்விடுத்து வருகின்றனர்.

150422081320_japan_nuclear_reactor_640x360_reuters

Related posts: