மொசூல் யுத்தம்: மக்களுக்காக அவசர முகாம்களை அமைக்கும் பணியில் ஐ.நா தீவிரம்!

Tuesday, October 18th, 2016

ஈராக்கில் உள்ள மொசூல் நகரை கைப்பற்ற தீவிரமான சண்டை நடந்து வரும் நிலையில், இந்த போர் காரணமாக இடம்பெயர வாய்ப்புள்ளதாக கருதப்படும் மக்களுக்காக நிறைய அவசர முகாம்களை அமைக்க தீவிரம் காட்டி வருவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

தொண்டு நிறுவனங்களிடம் போதுமான கூடாரங்கள் மற்றும் 4,000 பேர் வரையிலான பொதுமக்களுக்கு ஆதரவு வழங்க விநியோகங்கள் தயார் நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளர் லிசா கிராண்ட் தெரிவித்துள்ளார்.

மொசூல் நகருக்குள் இருக்கும் பொதுமக்களை ஈராக் பாதுகாப்பு படையினரால் பாதுகாக்க முடியாத பட்சத்தில் அவர்களை தெற்கு நோக்கி நகர்த்தும் திட்டத்தை படையினர் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தப்பிப்பதற்காக பாதுகாப்பு வழிகள் திறந்து வைக்கப்படும் என்று ஈராக் அரசாங்கம் உறுதி அளித்துள்ளதாக அந்த ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும், நகரின் உள்ளே கனரக ஆயுத தாக்குதல்கள் எதுவும் நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

_91953461_e11ff974-87a5-467c-86a9-aa9e90e6d3a8

Related posts: