முன்வைக்கப்பட்ட திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவு!

Monday, June 26th, 2017

பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவில் வாழும் ஒன்றியப் பிரஜைகளின் நிலை தொடர்பில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட குறைவு என ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

பிரஸ்சல்ஸில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில் “ஒன்றியப் பிரஜைகள் குறித்த திட்டங்கள் நாம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளன. அத்துடன் ஒன்றிய பிரஜைகள் எதிர்நோக்கும் அபாயம் மிக்க சூழ்நிலைகள் அதிகரிக்கக் கூடும்” என தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம்இ அதாவது ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா முழுமையாக விலகுவதற்கு முன்னர் அங்குள்ள ஒன்றிய பிரஜைகள் ஐந்து ஆண்டுகள் வசித்திருப்பார்களாயிள் அவர்கள் தொடர்ந்தும் பிரித்தானியாவில் இருக்கலாம் எனவும் அவர்களுக்கு பிரித்தானிய பிரஜைகளுக்கான அனைத்து அந்தஸ்தும் வழங்கப்படும் எனவும் மே தெரிவித்திருந்தார்.இருப்பினும் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எப்போது என்பது தொடர்பில் எவ்வித தகவல்களையும் மே தெரிவிக்காமையைத் தொடர்ந்துஇ ஒன்றிய தலைவர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Related posts: